காமன்வெல்த்! - பதக்கப் பட்டியலுக்கு மேலும் இரண்டு தங்கம் சேர்த்த இந்திய வீராங்கனைகள் #CWG2018Sponsoredஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை ஆறு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

21-வது காமன்வெல்த் போட்டிகள், கலைநிகழ்ச்சிகளுடன் ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில் கடந்த 4ம் தேதி துவங்கியது. 11 நாள்கள் நடக்கும் இந்த காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டுவீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலைத் தொடங்கியது. முதல் நாளில் 56 கிலோ பளு தூக்கும் போட்டியில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கே.பி. குருராஜ், வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார். இதனையடுத்து  தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் சதீஷ் சிவலிங்கம் பளு தூக்கும் போட்டியின் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். 

Sponsored


இந்நிலையில் பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு இன்று இரண்டு தங்கம் சேர்ந்துள்ளது. மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம்யாதவ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல்  துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கப்பதக்கம் வென்றார்.

Sponsored


பதக்கப்பட்டியலில் தற்போதுவரை  8 (ஆறு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ) பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளன.  


 Trending Articles

Sponsored