பஞ்சாபின் இந்த சின்ன வீக்னெஸ் கோப்பையை தட்டிப்பறிக்குமா? - கிங்ஸ் லெவன் அணி ரிவ்யூ! #IPL2018Sponsoredசர்வதேச அரங்கில் இந்திய ரசிகர்களிடம் இந்திய அணியைத் தவிர்த்து மிகவும் பிடித்த அணி எது என்று கேட்டால் சட்டென்று நியூசிலாந்து என்று குறிப்பிடுவார்கள். அதுபோல ஐ.பி.எல் போட்டிகளில் ஏறக்குறைய எல்லோருடைய இரண்டாவது சாய்ஸ் அணியாக இருப்பது கிங்ஸ் 11 பஞ்சாப் அணி தான். 

முதல் இரண்டு வருடங்களுக்கு யுவராஜ் சிங், பின்பு சங்கக்காரா எனத் தொடங்கி, ஆடம் கில்க்றிஸ்ட் (3 வருடங்கள்), ஜார்ஜ் பெய்லி, மில்லர், முரளி விஜய், க்ளென் மேக்ஸ்வெல் என சீசனுக்கு ஒரு கேப்டன் என தள்ளாடித் திணறினாலும், பெய்லியின் தலைமையில் இறுதிச்சுற்று வரை ஒரு முறை முன்னேறியது. இதுவரை பெரிதும் ஆஸ்திரேலிய கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களை நம்பிய நிர்வாகம், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை 7.6 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்து, அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பையும் கொடுத்துள்ளது.  

Sponsored


கடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தோடு அஸ்வினை இந்திய அணி பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை (ஒரு தின & டி20 ஆட்டங்களுக்கு). இதற்காகவே உள்ளூர் போட்டிகளில் தன்னுடைய பிரதான ஆஃப் ஸ்பின்னை கொஞ்சம் ஓரம்கட்டி வைத்து கிட்டத்தட்ட அணில் கும்ப்ளேவை ஞாபகப்படுத்தும் பௌலிங் ஆக்‌ஷனில் லெக் ப்ரேக்கும் பயின்று வருகிறார். இம்முறை அணிக்கு ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் பயிற்சியாளராகவும், சேவாக் அணியை ஒருங்கிணைத்து வழிநடத்துபவராகவும் செயல்படுகிறார்கள். 

Sponsored


ஆரோன் ஃபின்ச், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மற்றும் ஆன்ட்ரூ டை என இம்முறையும் பிரதானமாக ஆஸ்திரேலிய வீரர்களைக் கொண்டு களமிறங்கக்கூடும் என்று தெரிகிறது. அஸ்வினையே ஐ.பி.எல் போட்டிகளில் போட்டு பொளந்து கட்டிய கிளென் மாக்ஸ்வெல் அணியில் இல்லாதது பேரிழப்பே. ஏலத்தின் இரண்டாவது நாளில் க்றிஸ் கெய்லை வாங்கி டாப் ஆர்டர் பிரச்னையை ஓரளவுக்குத் தீர்த்தது பஞ்சாப். 

தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி வருவது அணிக்கு பலம் சேர்க்கும். இந்தியாவின் மயாங்க் அகர்வால் ரஞ்சி, இரானி மற்றும் துலீப் போட்டிகளில் கடந்த வருடம் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். பெங்களூருவுக்கு விளையாடி வந்த கே எல் ராகுல், விக்கட் கீப்பர் மற்றும் அதிரடியான ஓபனிங் என இரண்டு பொறுப்புகளை சிறப்பாக கையாள்வார் என நம்பலாம்.  

அனைவரையும் விடுவித்துவிட்டு அக்சர் படேலை மட்டும் தன்வசமாக்கிய நிர்வாகத்திற்கு படேல் பெரிதும் கடமைப்பட்டுள்ளார். பஞ்சாபின் சிங்கம் யுவராஜ்சிங் நிச்சயம் தான் யார் என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிவிட்டுத்தான் ஓய்வுபெறுவார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

இந்தியாவின் அட்டகாசமான இரண்டு ஸ்டேடியங்களில் விளையாடுவது பஞ்சாபிற்கு சாதகமான அம்சம் (மொஹாலி & தரம்சாலா). ஒரு பக்கம் சென்னை அணியிலிருந்து போராடி அஸ்வினை வாங்கி அவரை தலைமைத்தாங்க சொன்னாலும், அணியிலும் நிர்வாகத்திலும் இன்னமும் ஆஸ்திரேலிய ஆதிக்கம் அதிகம்தான். யுவராஜ், அஸ்வின், க்றிஸ் கெய்ல், கே எல் ராகுல், கருண் நாயர், அக்சர் படேல் போன்ற வீரர்கள் தங்களின் திறமையை முழுதாக வெளிப்படுத்தினால் மூன்றாவது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறலாம். 

ஆனால் அணியின் பெரிய மைனஸ் வேகப்பந்து வீச்சில் ஆன்ட்ரூ டையை மட்டுமே அதிகமாக நம்பியிருப்பது. மோகித் ஷர்மா விக்கெட்கள் எடுக்கத் தடுமாறி வருகிறார். மற்றொரு வீரரான பரீந்தர் ஸ்ரணின் எகானமி ரேட் கொஞ்சம் பயமுறுத்தக்கூடியதாக இருக்கிறது. டெப்த் ஓவர்களில் எந்த பவுலர் சிறப்பாக செயல்படுவார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. பின்ச் தொடக்க ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்பதால் க்றிஸ் கெய்லை வைத்து ஆடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பஞ்சாப் அணியின் பதினொரு ப்ளேயர்கள்:

கே எல் ராகுல்
க்றிஸ் கெய்ல் 
கருண் நாயர் 
மயாங்க் அகர்வால் 
யுவராஜ் சிங் 
டேவிட் மில்லர் 
மார்க்ஸ் ஸ்டோய்னிஸ்
அக்‌ஷர் படேல் 
அஸ்வின் 
ஆன்ட்ரூ டை 
மோகித் ஷர்மாTrending Articles

Sponsored