சென்னை அணியின் மைதானமாக புனே தேர்வா? என்ன சொல்கிறார் ராஜீவ் சுக்லாSponsoredசென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தின் சொந்த மைதானமாக புனே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிகளை தமிழகத்தில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று, சென்னை - கொல்கத்தா போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேப்பாக்கத்தைச் சுற்றிலும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Sponsored


 போட்டியின் இடையே, மைதானத்தின் உள்ளே செருப்பு வீசப்பட்டது. இதனால் பரபரப்பு நிலவுவதால், தொடர்ந்து சென்னையில் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் புனே மைதானத்துக்கு மாற்றப்படலாம் என ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,  'ஐபிஎல் போட்டிகளுக்கு போதுமான அளவில் பாதுகாப்பு அளிக்கமுடியாது என்று சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர். அதனால், போட்டிகள் இடமாற்றம் செய்யப்படுகிறது.

Sponsored


பல இடங்கள் ஆலோசிக்கப்பட்டுவருகிறது. பெரும்பாலும் போட்டிகள் புனே மைதானத்துக்கு மாற்றப்படவே வாய்ப்பு அதிகம். இதுகுறித்து ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பின்னரே தகவல்கள்  தெரிவிக்கப்படும்' என்று தெரிவித்தார். முன்னதாக தலைமைப் பயிற்சியாளர் பிளமிங் மற்றும் கேப்டன் தோனி இருவருக்கும் மிகவும் பழக்கப்பட்ட மைதானமாக புனே மைதானம் திகழ்வதால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவிவருகின்றன. Trending Articles

Sponsored