சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்! 194 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்ட மும்பை அணி #MIvsDDடெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில், முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. 

Sponsored


Photo: Twitter/mipaltan

Sponsored


மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் கௌதம் காம்பீர், ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை அணியின் இன்னிங்ஸைத் தொடங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் எவின் லீவிஸ் ஆகியோர் தொடக்க முதலே அதிரடி காட்டத் தொடங்கினர். இதனால் மும்பை அணி 8.5 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது. முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், லீவிஸ் 28 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷான் 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். முதல் 2 போட்டிகளில் ஜொலிக்காத மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா, இந்தப் போட்டியில் 4-வது வீரராகக் களமிறங்கினார். டாப் ஆர்டரில் 3 பேட்ஸ்மேன்களைத் தவிர மற்ற வீரர்கள் ஜொலிக்காததால், 200 ரன்களைக் கடந்து பெரிய அளவில் ஸ்கோர் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணி 194 ரன்களுக்குத் திருப்திப்பட்டுக்கொண்டது. குறிப்பாகக் கடைசி 5 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களை மட்டுமே எடுத்தது. ரோஹித் ஷர்மா, பொலார்ட் ரன் ஏதும் எடுக்காமலும், ஹர்திக் பாண்ட்யா 2 ரன்களிலும் ஆட்டமிழந்து மும்பை ரசிகர்களை ஏமாற்றினர். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. மும்பை மற்றும் டெல்லி அணிகள், தாங்கள் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதால் முதல் வெற்றிபெற இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. 

Sponsored
Trending Articles

Sponsored