காமன்வெல்த் 2018! - ஒரே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம் #SainaVsSindhu #CWG2018காமன்வெல்த் மகளிருக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தங்க பதக்கமும், சிந்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

Sponsored


21 ஆவது காமன்வெல்த் போட்டிகள் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில் தொடங்கியது. 11 நாட்கள் நடக்கும் இந்தத் தொடரில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்றன. இதன் முதல் நாளில் இருந்து இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். இதனால் பதக்கப் பட்டியலில் 26 தங்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் 79 தங்கங்கள் பெற்று ஆஸ்திரேலியாவும், இரண்டாவது இடத்தில் 43 தங்கப்பதக்கங்கள் பெற்று இங்கிலாந்தும் உள்ளது.

Sponsored


காமல்வெல்த் தொடங்கிய முதலில் நாளில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு இந்தியாவுக்கான முதல் தங்கத்தை பெற்றுத் தந்தார். இவரைத்தொடர்ந்து பளுதூக்குதல், துப்பாக்கிச்சுடுதல், பேட்மிண்டன்,டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைச் சேர்த்தனர். 

Sponsored


இறுதி நாளான இன்று நடைபெற்ற மகளிருக்கான பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி சிந்துவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த சாய்னா நேவால் முதல் சுற்றில் 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றும் சாய்னாவுக்கே சாதகமாக அமைந்தது. திறமையாக விளையாடிய சாய்னா 23-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றார். இவரின் வெற்றியால் இந்தியாவுக்கு 26-வது தங்கம் கிடைத்துள்ளது. இந்தப் போட்டியில் இரண்டாவதாக வந்த இந்திய வீராங்கனை பி.வி சிந்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 

இதேப் போன்று ஆடவருக்கான ஒற்றையர் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, மலேசியா வீரர் லீ காங் வெய்-யை எதிர்கொண்டார். நீண்ட நேரப்போராடத்துக்கு பிறகு 21 - 14 என்ற புள்ளி கணக்கில் மலேசிய வீரர் வெற்றி பெற்றார். ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.Trending Articles

Sponsored