`சிக்ஸர்’ சாம்சன் அதிரடி - 2018 ஐபிஎல்-லில் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்த ராஜஸ்தான்!Sponsoredராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. 

Photo: Twitter/@IPL

Sponsored


பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் ரஹானே, சிறப்பான தொடக்கம் கொடுத்தார். 5.4 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்திருந்தபோது, 36 ரன்களில் ரஹானே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷார்ட் 11 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 27 ரன்களிலும் வெளியேறினர். மறுமுனையில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்ஸன் 34 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன் பின்னர் ரன் வேகத்தை டாப் கியருக்கு மாற்றிய சாம்ஸன், சிக்ஸர்களால் பெங்களூர் வீரர்களை சோதித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த சாம்ஸன் 45 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசினார். ஜோஸ் பட்லர் 23 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி 5 பந்துகளில் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 15 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் எடுத்திருந்த ராஜஸ்தான் அணி, கடைசி 5 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். பெங்களூரு அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 

Sponsored
Trending Articles

Sponsored