ஐ.பி.எல் 2018: கொல்கத்தா அணிக்குச் சவாலான இலக்கு!#RRvKKRஐ.பி. எல் 18 -ன் 15 வது லீக் ஆட்டம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. 

Sponsored


Photo: Twitter/IPL

Sponsored


ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக கேப்டன் ரஹானே மற்றும் ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே ரஹானே அதிரடியாகவும், ஷார்ட் நிதானமானவும் விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் ரஹானே ஆட்டமிழந்தார். ராஹானே 19 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். 
அடுத்ததாக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சாம்சன், இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அவர் 7 ரன்களிள் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய  ஷார்ட் 44 ரன்களில் நிதிஷ் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாகக் களமிறங்கிய திரிபாதி(15), ஸ்டோக்ஸ்(14), கெளதம்(12), ஸ்ரேயேஸ் கோபால்(0) ரன்களிலும் ஆடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  

Sponsored


இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் நிதிஷ் ராணா மற்றும் குர்ரான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். கொல்கத்தா அணி வெற்றிபெற 20 ஓவர்களில் 161 ரன்கள்  தேவை. Trending Articles

Sponsored