ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம்! சதீஷ் சிவலிங்கம் உறுதி



Sponsored



'ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே என்னுடைய அடுத்த இலக்கு' என்று காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழர், சதீஷ் சிவலிங்கம் தெரிவித்துள்ளார். 


காமன்வெல்த் நாடுகளின் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்தது. அதில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய வீரர்கள், 66 பதக்கங்களை வென்று அசத்தினர். காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்திய வீரர்கள் நாடு திரும்பிவருகின்றனர். பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம், சென்னை வந்தடைந்தார். அவருக்கு, சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ் சிவலிங்கம், 'மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு மற்றும் என்னுடைய முயற்சியால் இலக்கை எட்டியுள்ளேன். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு'' என்று தெரிவித்தார். 

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored