`ஃபீல்டிங் சென்டிமென்டுக்குத் திரும்பிய அஸ்வின்!’ - ஈடன்கார்டனில் கொல்கத்தா அணி பேட்டிங் #KKRvsKXIPகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

Sponsored


Photo: Twitter/lionsdenkxip

Sponsored


ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர்கொள்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் இருவரும் ஐபிஎல் அணிகளின் கேப்டன்களாக நியமிக்கப்பட்ட பிறகு, இருவர் தலைமையிலான அணிகள் முதல்முறையாக மோதுகின்றன. ஈடன்கார்டன் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் மோஹித் சர்மாவுக்குப் பதிலாக அங்கீத் ராஜ்புத் விளையாடுகிறார். கொல்கத்தா அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

Sponsored


இதற்கிடையே, இரு அணிகளும் லீக் போட்டிகளில் தலா 3 வெற்றியைப் பதிவு செய்துள்ளன. `யூனிவெர்சல் பாஸ்' என அழைக்கப்படும் கெயிலின் அதிரடி ஃபார்ம் பஞ்சாப் அணிக்குக் கூடுதல் பலத்தை அளிக்கிறது. இதேபோல் கொல்கத்தா அணியிலும் சுனில் நரேன், ரஸல் என பஞ்சாப்புக்குப் போட்டியாக அதிரடியில் கலக்கி வருகின்றனர். இதனால் இந்தப் போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. Trending Articles

Sponsored