`தவான் அவுட்; டூ பிளஸிஸ் இன்' - வெற்றியைத் தொடருமா சென்னை சூப்பர் கிங்ஸ்? #SRHvsCSK



சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

Sponsored


photo credit : Twitter/@chennaiipl

Sponsored


வீக் என்ட் என்பதால் ஐ.பி.எல் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியைச் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. ராஜிவ் காந்தி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாகச் சேர்க்கப்படவில்லை. 

Sponsored


அவருக்குப் பதிலாக ரிக்கி புகி சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் ஜோர்டனுக்கு பதிலாகப் பில்லி சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை அணியில் இம்ரான் தாஹிருக்கு பதிலாக டூ பிளஸிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, இரு அணிகளும் லீக் போட்டிகளில் தலா 3 வெற்றியைப் பதிவு செய்துள்ளன. ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடி வாட்சன் ஃபார்மில் இருப்பது சென்னை அணிக்குக் கூடுதல் பலத்தை அளித்துள்ளது. எனினும் ஹைதராபாத் அணி பௌலிங்கில் கலக்கி வருவது சென்னைக்கு சற்று இடைஞ்சலைக் கொடுக்கலாம். இருப்பினும் கடந்த போட்டியில் பஞ்சாப் அணியிடம் ஹைதராபாத் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 



Trending Articles

Sponsored