`அதிரடி காட்டிய ராயுடு, ரெய்னா' - 182 ரன்கள் குவித்த சென்னை அணி..!அம்பதி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 182 ரன்கள் குவித்துள்ளது.

Sponsored


photo credit : twitter/ipl

Sponsored


ஐ.பி.எல் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியைச் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. ராஜிவ் காந்தி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்துவீச தீர்மானித்தார். ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாகச் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ரிக்கி புகி சேர்க்கப்பட்டார். இதேபோல் ஜோர்டனுக்கு பதிலாகப் பில்லி விளையாடினார். சென்னை அணியில் இம்ரான் தாஹிருக்கு பதிலாக டூ பிளஸிஸ் விளையாடினார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் டாப் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 

Sponsored


ராயுடுவுக்கு பதிலாக டூ பிளஸிஸ் வாட்சனுடன் களம் கண்டார். கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய வாட்சன் இந்தமுறை ரசிகர்களைச் சோதித்தார். மெதுவாக ஆடிய வாட்சன் 15 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டூ பிளஸிஸ் சோபிக்க தவறினார். 11 ரன்களில் அவர் வெளியேறச் சென்னை தடுமாற்றம் கண்டது. இருப்பினும் பின்னர் இணைந்த அம்பதி ராயுடு - ரெய்னா இணை அணியைச் சரிவில் இருந்து மீட்டது. ரெய்னா பொறுப்பாக ஆட அம்பதி ராயுடு அதிரடி காட்டினார். 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 79 ரன்களில் ராயுடு ரன் அவுட் ஆக ரெய்னா அரைசதம் அடித்தார். இதன்பின் களமிறங்கிய கேப்டன் தோனி தன் பங்குக்கு அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ரெய்னா 54 ரன்களுடனும், தோனி 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். Trending Articles

Sponsored