`சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்' - 167 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ்..!Sponsoredராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 167 ரன்கள் குவித்துள்ளது.

photo : twitter/ipl

Sponsoredஐ.பி.எல் தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்  - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லை. ராஜஸ்தான் அணியில் பின்னி, பென்னுக்கு பதிலாக குல்கர்னி, ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் லீவிஸ், முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். எனினும் அடுத்து இணைந்த இஷான் கிஷான் - சூரியகுமார் யாதவ் இணை அதிரடியாக ஆடியது. இருவரும் அணியின் ரன் ரேட்டை 9-க்கு குறையாமல் பார்த்துக்கொண்டனர். 14.2-வது ஓவரில் 58 ரன்கள் எடுத்திருந்த போது, இஷான் கிஷான் வெளியேற, அவரைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் 72 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் வந்த ரோஹித் ஷர்மா வந்த வேகத்திலேயே ரன் அவுட் ஆகி நடைகட்டினார். இதன்பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் 19-வது ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. 

Sponsored
Trending Articles

Sponsored