`18 ஆண்டுகள் ஆகிவிட்டன'- 2019 க்குப் பிறகு ஓய்வை அறிவிக்கிறார் யுவராஜ் சிங்``2019 உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவேன்'' என இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

Sponsored


2011-ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார் யுவராஜ் சிங். 2011 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது பெற்று அசத்திய இவர் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இதனால் இந்திய அணியில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் போட்டியில் அவரது ஹோம்டவுன் பஞ்சாப் அணிக்காக ஆடிவருகிறார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அடுத்து இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், 2019 உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவேன் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

Sponsored


இதுகுறித்து ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,  ``2000-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை விளையாடுவேன். அதன்பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவேன். எல்லோரும் சில காலத்துக்குப் பின்பு ஓய்வு பெறுவது வழக்கமான ஒன்றுதான்" என்றார்.

முன்னதாக பஞ்சாப் அணி குறித்து பேசிய யுவராஜ் சிங்,  ``இந்த வருடம் ஒரு சிறந்த அணி எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. எங்களிடம் பவர்புல் பேட்ஸ்மேன்கள் மற்றும் ஸ்மார்ட் பவுலர்கள் உள்ளனர். கண்டிப்பாக பிளே ஆப்-க்குத் தகுதிபெற்று கோப்பையைக் கைப்பற்றுவோம். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored