2019- உலகக் கோப்பை தொடரில் ஜூன் 16-ந் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா மோதல்Sponsoredலகக் கோப்பை (2019) போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 4- ந் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்ரிக்காவை சந்திக்கிறது. 

இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி தொடங்கும் இந்த போட்டி ஜூலை 14-ந் தேதி நிறைவடைகிறது. கொல்கத்தாவில் ஐ.சி.சி செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டது அதன்படி,பாகிஸ்தான் அணியுடன் ஜூன் 16-ந் தேதி இந்தியா மோதுகிறது. ஓல்ட் ட்ராஃபோர்டில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் முதல் ஆட்டம் ஜூன் 2-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்த பின்னர் 15 நாள்கள் இடைவேளி தேவை என பி.சி.சி.ஐ, ஐ.சி.சியிடம் தெரிவித்தது,

Sponsored


இதையடுத்து, இந்தியாவின் முதல் ஆட்டம் ஜூன் 4- ந் தேதிக்கு மாற்றப்பட்டது. 2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் மார்ச் - 20 முதல் மே 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. 2015 -ம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் முதல் ஆட்டத்திலேயே இந்திய அணி பாகிஸ்தானை சந்தித்து, வெற்றி பெற்றது. முழு அட்டவணை ஏப்ரல் 30-ந் தேதி வெளியிடப்படும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. 

Sponsored


ரவுண்ட் ராபின் முறையில் என்றால் பிரிவுகள் பிரிக்கப்படாது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் நான்கு  இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் இந்த முறையில்தான் நடைபெற்றது. Trending Articles

Sponsored