கொல்கத்தாவை வீழ்த்திய டெல்லி அணி..!Sponsoredகொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலானப் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சைத் தீர்மானித்தது. டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ப்ரித்திவ் ஷா, 62 ரன்களைக் குவித்தார். அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 40 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது.

Sponsored


Sponsored


அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அண்ட்ரூ ரசூல் மட்டும் அதிகபட்சமாக, ரசூல் 44 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 164 மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.Trending Articles

Sponsored