'ரெய்னா அசத்தல் அரைசதம்!’ - மும்பை அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னைSponsoredமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 

புனே மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணி, கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் களமிறங்க, மும்பை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பொல்லார்ட் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோருக்குப் பதிலாக பென் கட்டிங் மற்றும் டுமினி ஆகியோரை மும்பை அணி களமிறக்கியது. 

Sponsored


வாட்சன் மற்றும் அம்பாதி ராயுடு ஆகியோர் சென்னை அணியின் இன்னிங்ஸைத் தொடங்கினர். மெதுவாக ரன்குவிப்பைத் தொடங்கிய வாட்சன் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ராயுடுவுடன் கைகோத்த ரெய்னா, ரன் குவிப்பை துரிதப்படுத்தினார். 2-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், அம்பாதி ராயுடு ஆட்டமிழந்தார். அவர் 35 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். இந்த முறை 4-வது வீரராகக் களமிறங்கிய தோனி, 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பிராவோ, தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கடைசி வரை களத்தில் இருந்த ரெய்னா, 75 ரன்கள் சேர்த்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்டது. 12.2 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்த சென்னை அணி, அதன்பிறகான 7.4 ஓவர்களில் 69 ரன்கள் மட்டுமே சேர்த்தது.  
 

Sponsored
Trending Articles

Sponsored