'ஃபீல்டிங் சென்டிமென்டுக்கு குட்பை’ - முதன்முறையாக பேட்டிங் தேர்வு செய்த ஹைதராபாத்! #RRvsSRHSponsoredராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். 

ஜெய்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இந்தபோட்டி நடைபெறுகிறது. கடந்த இரண்டு போட்டிகளிலும் குறைவான ஸ்கோர் அடித்தும், சிறப்பான பந்துவீச்சால் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றிருந்தது. அந்த நம்பிக்கையில் உற்சாகமாக அந்த அணி களம் காண்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆஃப்கானிஸ்தான் வீரர் முகமது நபிக்குப் பதிலாக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் இது அவருக்கு முதல் போட்டி ஆகும். அதேபோல், ராஜஸ்தான் அணி சார்பாக நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி மற்றும் ராஜஸ்தான் அணிக்காக உள்ளூர் தொடர்களில் விளையாடிய மஹிபால் லோமர் ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் களம்காண்கின்றனர். 

Sponsored


நடப்பு ஐபிஎல் தொடரின் பெரும்பாலான போட்டிகளில் டாஸ்வென்ற அணி, ஃபீல்டிங்கே தேர்வு செய்து வந்தது. அந்த நடைமுறை மிகச்சில போட்டிகளிலேயே மாறியிருந்தது. அந்த வகையில் ஐபிஎல் தொடரின் ஃபீல்டிங் சென்டிமென்டிலிருந்து வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் டாஸ் வென்று ஹைதராபாத் அணி முதன்முறையாக பேட்டிங் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Sponsored
Trending Articles

Sponsored