'இங்கிடி, ஆசிஃபுக்கு வாய்ப்பு!’ - டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை பேட்டிங்Sponsoredசென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

புனே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, 4 மாற்றங்களைச் செய்துள்ளார். அதன்படி, இம்ரான் தாஹிர், சாம் பில்லிங்ஸ், தீபக் சஹார் மற்றும் ஸ்ரதுல் தாகுர் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக, தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி, கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப், சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மா மற்றும் டூபிளஸி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக தென்னாப்பிரிக்க வேகம் இங்கிடிக்கு இது முதல் ஐபிஎல் போட்டியாகும். 

Sponsored


அதேநேரம், டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் மாற்றமின்றி களமிறங்குகிறது. இதனால், இந்த முறையும் டெல்லி அணியின் பிளேயிங் லெவனில் கவுதம் கம்பீருக்கு இடமில்லை. டெல்லி அணியின் தொடர் தோல்விகளுக்குப் பின்னர், கேப்டன் பொறுப்பிலிருந்து கம்பீர் கடந்த போட்டிக்கு முன்னதாக விலகினார். அதன்பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டெல்லி அணி களம்கண்டது. அந்தப் போட்டியிலும் கம்பீர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Sponsored
Trending Articles

Sponsored