வாட்சன், தோனி அதிரடி! டெல்லிக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னைSponsoredடெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. 

புனே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஃபீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் வேகப்பந்துவீச்சு கூட்டணி உள்பட 4 மாற்றங்களை கேப்டன் தோனி செய்திருந்தார். அதன்படி, இம்ரான் தாஹிர், சாம் பில்லிங்ஸ், தீபக் சஹார் மற்றும் ஸ்ரதுல் தாகுர் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக, தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி, கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப், சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மா மற்றும் டூபிளஸி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக தென்னாப்பிரிக்க வேகம் இங்கிடிக்கு இது முதல் ஐபிஎல் போட்டியாகும். 

Sponsored


சென்னை அணியின் இன்னிங்ஸை வாட்சன், டூபிளஸி ஜோடி தொடங்கியது. ஒருபுறம் டூபிளசி மெதுவாக ரன் குவித்தாலும், மறுமுனையில் வாட்சன் அதிரடி காட்டினார். முதல் விக்கெட்டுக்கு 10.5 ஓவர்களில் 102 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 33 ரன்கள் எடுத்திருந்த டூபிளசி ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரெய்னா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய வாட்சன் 40 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அம்பாதி ராயுடு - தோனி கைகோத்தனர். டெல்லி பந்துவீச்சாளர்களைச் சோதித்த இந்த ஜோடி 15 - 18 இடைப்பட்ட 3 ஓவர்களில் அதிரடியாக ஆடி 50 ரன்களைக் குவித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் அம்பாதி ராயுடு 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 22 பந்துகளைச் சந்தித்த தோனி 51 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் மேக்ஸ்வெல், விஜய் சங்கர் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  

Sponsored
Trending Articles

Sponsored