'தனி ஒருவனாகப் போராடிய பாண்டியா' - 23 எக்ஸ்ட்ராக்கள் கொடுத்தும் வெற்றிபெற்ற பெங்களூர் அணி!



Sponsored



மும்பை இந்தியன்ஸ்  அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

photo credit : twitter/ipl

Sponsored


ஐ.பி.எல் 31வது லீக் போட்டியில் இன்று பெங்களூர் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. பெங்களூரு சின்னசுவாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் பெங்களூர் அணி களம்கண்டுள்ள நிலையில், மும்பை அணியில் லீவிஸ்-க்குப் பதிலாக பொலார்ட் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில் டாப் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. டி காக், மனன் வோரா ஓப்பனிங் இறங்கினர். டி காக் 7ரன்களிலே வெளியேற, வோரா 45 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் இணைந்த கோலி - மெக்கல்லம் ஜோடி பொறுமையாக ஆடினர். மெக்கல்லம் 37 ரன்களிலும், கோலி 32 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்துவந்த வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. 

Sponsored


பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களில் இஷான் கிஷான் 'டக்' அவுட் ஆகி அதிர்ச்சி தர, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். போதாக்குறைக்கு அடுத்துவந்த கேப்டன் ரோஹித் சர்மாவும் வந்த வேகத்தில் வெளியேறினார். இதனால் ஒருகட்டத்தில் மும்பை அணி ஆட்டம் கண்டது. ஆனால் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனி ஒருவனாகப் போராடி 50 ரன்கள் குவித்தார். வெற்றிக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தில் பாண்டியா அவுட் ஆனார். இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்து  தோல்வியை தழுவியது.  பேட்ஸ்மேன்களின் சொதப்பல் ஆட்டத்தால் எட்டக் கூடிய இலக்கை அடையாமல் மும்பை அணி தோல்வியடைந்தது. அதிகபட்சமாக இந்தப் போட்டியில் பெங்களூர் அணி உதிரிகளாக மட்டுமே  23 ரன்கள் விட்டுக்கொடுத்தது. இதில் 18 வொயிடுகளும் அடங்கும். 



Trending Articles

Sponsored