'யங் மென்' ஷோ காண்பித்த டெல்லி - ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 151 ரன்கள் இலக்கு!Sponsoredராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு  டெல்லி டேர்டெவில்ஸ் அணி 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.  

photo credit: twitter/ipl

Sponsored


ஐ.பி.எல் 32வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் தொடக்கத்திலேயே மழை பெய்ததால் போட்டி தாமதமாக்க தொடங்கப்பட்டதுடன், 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. ஓவர்கள் குறைக்கப்பட்டதால், பவர் ப்ளே ஓவர்களும் 6-லிருந்து 5ஆகக் குறைக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணிக்கு இந்த முறை கோலின் முன்ரோ ஏமாற்றம் தந்தார். முதல் ஓவரிலேயே அவர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். பின்னர் இணைந்த பிருத்வி ஷா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இணை ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். 25 பந்துகளில் 4 சிக்கர்ஸ், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் குவித்தபோது, ஸ்ரேயாஸ் கோபாலிடம் கேட்ச் கொடுத்து பிருத்வி ஷா வெளியேறினார். 

Sponsored


இதனையடுத்து வந்த இளம் வீரர் ரிஷப் பாண்ட் ஸ்ரேயாஸ் ஐயருடன் கூட்டணி அமைத்தார். இருவரும் சேர்ந்து ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். குறிப்பாக பாண்ட்  ராஜஸ்தான் பவுலர்களை சோதித்தார். இருவரும் ரன்ரேட்டை 9 ரன்களுக்கு  குறையாமல் பார்த்துக்கொண்டனர். அரை சதம் அடித்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரும், 69 ரன்கள் எடுத்தநிலையில் ரிஷப்பும் அவுட் ஆகினர். 17.1 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 12 ஓவர்களில் 151 எடுத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி என்ற இலக்கை நோக்கிக் களமிறங்கவுள்ளது. இளம்வீரர்கள் கூட்டணியால் டெல்லி அணி இமாலய இலக்கை நிர்ணயித்தது. ராஜஸ்தான்  தரப்பில் ஜெயதேவ் உனட்கட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.Trending Articles

Sponsored