`அதிரடி காட்டிய சீனியர் - ஜூனியர் காம்போ' - 5-வது வெற்றியைப் பதிவுசெய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்!Sponsoredசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில்  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

photo credit : twitter/ipl

Sponsored


கொல்கத்தா ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேவேளையில். கொல்கத்தா அணியில் ஒரே ஒரு மாற்றமாக ராணாவுக்குப் பதிலாக ரிங்கு சிங் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். பின்னர் களமிறங்கிய சென்னை அணியில் தோனி மற்றும் ரெய்னா உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. தோனி இந்த முறை 43 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரேன் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

Sponsored


இதையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணிக்குத் தொடக்க வீரர் கிறிஸ் லின் ஏமாற்றினாலும், மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரேன் அதிரடி காட்டினார். அவர் 20 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன்பின் வந்த உத்தப்பா 6 ரன்களில் நடையைக்கட்டப் பின்னர் இணைந்த சுப்மன் கில் - கேப்டன் தினேஷ் கார்த்திக் சென்னை பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த சீனியர் - ஜூனியர் காம்போ கொல்கத்தா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. அதிரடியாக ஆடிய சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். விரைவாக ரன் சேர்த்த இந்த ஜோடி 14 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது. கில் 36 பந்துகளில் 57 ரன்களும் எடுத்தார். இதேபோல் கேப்டன் தினேஷ் கார்த்திக்  18 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் இன்று ரன்களை வாரிக்கொடுத்தனர். குறிப்பாக ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதேபோல் நெகிடி 3 ஓவர்களுக்கு 36 ரன்களும், ஆசிப் 3 ஓவர்களுக்கு 32 விட்டுக்கொடுத்தனர்.Trending Articles

Sponsored