டி வில்லியர்ஸ் வருகிறார்... டு பிளெஸ்ஸி தேவையா தோனி? #CSKvRCBSponsored2018 ஐபிஎல் சீசனின் டேபிள் டாப்பராக, நம்பர் ஒன் அணியாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தாவுடனான தோல்வியின் மூலம் நம்பர் 2-வாக கீழே இறங்கியிருக்கிறது. இன்று பெங்களூருடவுனான ஆட்டத்தில் தோல்வியடைந்தால் இன்னும் கீழே இறங்கும். #CSKvRCB

பெங்களூரு கீழே எல்லாம் போகவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் கீழேயே இருப்பதால் இனிவரும் 6 போட்டிகளிலும் கிட்டத்தட்ட வென்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறது ஆர்சிபி. 

Sponsored


சென்னை இன்றைய போட்டியில் தோல்வியடைந்தாலும் ப்ளே ஆஃப்க்கு பிரச்னை இல்லை. ஆனால், தோல்வியடைந்தால் அது அணியின் நம்பிக்கையை முழுவதுமாகக் குலைத்துவிடும். சென்னை செம ஸ்ட்ராங்காக இருக்கிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு இனியும் தப்பிக்க முடியாது. அணியில் நிச்சயம் சில மாற்றங்களைச் செய்தேயாக வேண்டும் தோனி!

Sponsored


டு பிளெஸ்ஸி வேண்டுமா?

டி-20 கிரிக்கெட்டில் 30 ரன்கள் என்பது கிட்டத்தட்ட அரை சதம் போலத்தான். ஆனால், வெறும் 30 ரன்கள் அடிப்பதற்காகவே அணியில் ஒருவர் வேண்டுமா?  டு பிளெஸ்ஸியை இன்ஃபார்ம் பேட்ஸ்மேன் என்றும் சொல்லமுடியாது. அவரால் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சாவ்லாவை சந்திக்க ரொம்பவே திணறினார். சாவ்லாவைவிட சிறந்த லெக் ஸ்பின்னர் பெங்களூரு அணியில் இருக்கும் யுவேந்திர சாஹல். இவரைத்தான் பவர்பிளே ஓவர்களில் இறக்குவார் கோலி. அதனால் வாட்சனுடன், ராயுடு ஓப்பனிங் வருவதே சரியாக இருக்கும்.

4 டவுன் பேட்ஸ்மேனாக டெத் ஓவர்களில் 30 ரன்கள் அடிக்ககூடிய, வேகப்பந்து வீசக்கூடிய இடதுகை பெளலர் டேவிட் வில்லியை அணிக்குள் எடுப்பதுதான் சென்னைக்கு பெரும் பலம் சேர்க்கும். சென்னை, பெங்களூரு என இரு அணிகளுமே பெளலிங்கில் வீக்கான அணிகள்தான். ஆனால், ஸ்பின் பெளலிங்கில் பெங்களூருவை விடவும் பலவீனமாக இருக்கிறது சென்னை. பெங்களூரு அணிக்குள் இன்றைய மேட்ச்சில் டி வில்லியர்ஸ் விளையாட வருகிறார் என்பதே பெங்களூருவுக்கு புத்துணர்வு தரும். இதுவரை ஆடிய போட்டிகளில் பெரும்பாலான ஆட்டங்களில் டி வில்லியர்ஸின் விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர்கள்தான் எடுத்திருக்கிறார்கள். ஆனால், சென்னைக்கு எதிரான மேட்ச்சில் டி வில்லியர்ஸின் விக்கெட்டை எடுத்தவர் இம்ரான் தாஹிர். அதற்குள் டி வில்லியர்ஸ் 30 பந்துகளில் 68 ரன்கள் அடித்துவிட்டார் என்பது வேறு விஷயம். 

டி காக் பெங்களூரு அணியில் இல்லை. அவருக்குப் பதிலாக பார்த்தீவ் பட்டேலை களம் இறக்குகிறது பெங்களூரு. மெக்கல்லம், பார்த்தீவ், டி வில்லியர்ஸ், கோலி, மந்தீப் சிங், கிராந்தோம் என்பதுதான் பெங்களூருவின் பேட்டிங் லைன் அப் ஆக இருக்கும். கோலி, மெக்கல்லம், டி வில்லியர்ஸின் பேட்டிங்கை சமாளிக்க தோனி வேகப்பந்து, ஸ்பின் என மாற்றி மாற்றி பெளலர்களை இறக்க வேண்டும்.

கடந்த இரண்டு போட்டிகளில் ஆசிஃப் ரன்களை அதிகம் கொடுத்தாலும் மிகச்சிறப்பாக பந்துவீசுகிறார். ஆசிஃப் சென்னை எம்.ஆர்.எஃப் பேஸ் ஃபவுண்டேஷனின் படைப்பு. க்ளென் மெக்ராத்திடம் பெளலிங் கற்றவர். அவரிடம் வேகம் இருக்கிறது. அதனால் அவரை தோனி தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். நிச்சயம் அவர் இன்றைய மேட்ச்சில் முக்கியமான பெளலராக இருப்பார்.

பெங்களூரு அணிக்கு எதிராக இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசியிருப்பதால் கரன் ஷர்மாவுக்குப் பதிலாக தாஹிரை அணிக்குள் சேர்க்கலாம். வாட்சன், பிராவோ, வில்லி, தாஹிர் என நான்கு வெளிநாட்டு  வீரர்கள் சரியாக இருப்பார்கள்.  ஆனால், ஜடேஜா? நிச்சயம் அவர் இந்தப் போட்டியிலும் விளையாடுவார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸின் ஒரு அங்கமாகவே தோனியும், ஃப்ளெமிங்கும் பார்க்கிறார்கள். அதனால் அவர் தொடர்ந்து அணியில் இருப்பார் என்றே எதிர்பார்க்கலாம்.

சென்னை அணியின் சிறந்த டெத் பெளலர் பிராவோ. ஆனால், அவரது பெளலிங்கை எதிர் அணியினர் கணிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதற்கு சாட்சிதான் கடந்த சில போட்டிகளாக அவரின் பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறப்பது. இன்றைய மேட்ச்சிலும் பிராவோவின் பெளலிங் எடுபடுமா என்பது சந்தேகமே!

சென்னையின் பேட்டிங்!

சென்னையின் பேட்டிங் ஸ்ட்ராங்தான் என்றாலும் பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், சுனில் நரேன் என மூன்று ஸ்பின்னர்களையும் அடிக்கமுடியாமல் அவதிப்பட்டது. சாஹல், வாஷிங்டன் சுந்தர் என இரண்டு ஸ்பின்னர்களைத்தான் கோலி பயன்படுத்துவார். கோலி ஸ்மார்ட் கேப்டனாக இருந்தால் இன்னொரு ஸ்பின்னரான முருகன் அஷ்வினை களத்தில் இறக்கலாம். கடந்த போட்டியில் சென்னை கோரி ஆண்டர்சனைப் பதம் பார்த்ததுபோல், இந்த மேட்ச்சில் செய்ய முடியாது. ஏனெனில், அவருக்குப் பதில் டிம் செளத்தி வந்துவிட்டார். இவர் ஏற்கெனவே சென்னை அணியில் இருந்தவர்.

தோனி, ரெய்னா, உள்ளிட்ட வீரர்களுக்கு பயிற்சிகளின்போது அதிகமுறை பந்துவீசியவர் என்பதால் அவர்தான் இன்றைக்கு கோலியின் முக்கிய பெளலர். கடந்த போட்டியில் முகமது சிராஜ் வீசிய 4 ஓவர்களில் 48 ரன்கள் அடித்து துவைத்தது சென்னை. ஆனால், கடந்த இரண்டு போட்டிகளாக சிராஜ் மிகச்சிறப்பாக பந்துவீசிவருகிறார். முக்கியமான விக்கெட்டுகளை சரிக்கிறார். அதனால் அவரின் பந்துவீச்சை சென்னை அசால்ட்டாக டீல் செய்ய முடியாது.

செளத்தி, உமேஷ் யாதவ், சிராஜ், சாஹல், வாஷிங்டன் சுந்தர் என்பதுதான் கோலியின் பெளலிங் அட்டாக். இதில் சாஹல், செளத்தியை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை அடிக்கலாம் என்பதுதான் தோனியின் பிளானாக இருக்கும்.

டாஸ்!

இரண்டு அணிகளுமே டாஸ் வென்றால் முதலில் பெளலிங்கைத்தான் தேர்ந்தெடுக்கும். சென்னை முதலில் பேட்டிங் ஆடினால் 200 ரன்களுக்கு மேல் டார்கெட் வைத்தால்தான் வெற்றிபெறமுடியும். அதேபோல் பெங்களூரு முதலில் ஆடி கிட்டத்தட்ட 200 ரன்கள் அடித்தால், சென்னை 12 ஓவர்கள் வரை விக்கெட்டுகளை இழக்காமல் ரன்ரேட்டை 8-க்குள் மெயின்டெய்ன் செய்தாலே டெத் ஓவர்களில் அடித்து நொறுக்கலாம். பத்து ஓவர்களுக்குள் இரண்டு மூன்று விக்கெட்டுகளை சென்னை இழந்தால் அது தோல்விக்குத்தான் வழிவகுக்கும்.

கோலியா - தோனியா... உங்கள் சப்போர்ட் யாருக்கு?Trending Articles

Sponsored