`மூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் சிஎஸ்கே!’ பெங்களூர் அணி பேட்டிங்Sponsoredபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார்.


புனே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், காயத்திலிருந்து மீண்ட பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் டிவிலியர்ஸ் மீண்டும் களமிறங்குவதால், அந்த அணி உற்சாகமாகக் களமிறங்குகிறது. டிகாக்குக்குப் பதிலாக அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். மனன் வோராவுக்குப் பதிலாக பார்த்திவ் படேலும், வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக முருகன் அஷ்வினும் சேர்க்கப்பட்டுள்ளனர். 
அதேபோல், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியிலும் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டூபிளசிக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் டேவிட் வில்லியும், கரண் ஷர்மாவுக்குப் பதிலாக துருவ் ஷோரேவும், கே.எம்.ஆசிஃபுக்குப் பதிலாக ஸ்ரதுல் தாக்குரும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர். பெங்களூர் அணியைப் பொறுத்தவரையில், இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே பிளே - ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பைத் தக்க வைக்க முடியும். மேலும், இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால், லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொள்ளும். எனவே, இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது என்று நம்பலாம். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored