இரண்டாவது முறையாக பெங்களூரை வீழ்த்திய சென்னை! புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் #CSKvsRCBSponsoredபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. 

புனே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி பேட்ஸ்மேன்களுக்குச் சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக, ஜடேஜா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசினர். இந்த ஜோடி 5 விக்கெட்டுகளை வீழ்த்த, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி தரப்பில் பார்த்திவ் படேல் 53 ரன்கள் எடுத்தார். குறிப்பாக, கோலியின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். அதன்பின்னர், ஜடேஜா மற்றும் கோலியின் ரியாக்‌ஷன்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

Sponsored


128 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்குச் சுமாரான தொடக்கமே அமைந்தது. ஸ்கோர் 18 ஆக இருந்தபோது வாட்சன் 11 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த ரெய்னா, அம்பாதி ராயுடுவுடன் இணைந்து சீரான ரன்குவிப்பில் ஈடுபட்டார். இரண்டாவது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரெய்னா, உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 25 ரன்கள் சேர்த்தார். அவர் ஆட்டமிழந்த சிறிதுநேரத்திலேயே, அம்பாதி ராயுடு மற்றும் துருவ் ஷோரே ஆகியோர் அவுட் ஆகி வெளியேறினர். அப்போது, சென்னை அணி 12.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து கைகோத்த கேப்டன் தோனி மற்றும் ஆல்ரவுண்டர் பிராவோ சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பெங்களூர் அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை சென்னை அணி 18 ஓவர்களில் எட்டியது. தோனி, 31 ரன்களுடனும், பிராவோ 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சாஹல் வீசிய 18வது ஓவரில் தோனி 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். பெங்களூர் அணி தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சென்னை அணி பேட்டிங்கின் போது பெங்களூரு வீரர்கள், முருகன் அஷ்வினின் ஒரே ஓவரில் பிராவோ-வுக்கு 2 கேட்சுகளைத் தவற விட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி மீண்டும் முதலிடம் பிடித்தது. 
 

Sponsored
Trending Articles

Sponsored