கே.எல். ராகுல் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான்; மூன்றாவது இடத்தில் பஞ்சாப்!#IPLSponsoredகே.எல். ராகுல் அதிரடியின் உதவியுடன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

Photo: Twitter/IPL

Sponsored


ஐபிஎல் 2018 தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் இன்று, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி இந்தூர், ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8 மணிக்குத்  தொடங்கியது. 

Sponsored


டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பந்துவீச முடிவுசெய்தார். அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஷார்ட் களமிறங்கினர். முதல் ஓவரிலே ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில் ஷார்ட் அஷ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தார். அடுத்ததாக, கேப்டன் ரஹானே களமிறங்கினார். அவரும் வந்த வேகத்தில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர், பட்லர் மற்றும் சாம்சன் இணைந்து, அணியைச்  சரிவில் இருந்து மீட்டனர். சாம்சன் 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து, டை பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துக்  களமிறங்கிய ஸ்டோக்ஸ், 12 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அரை சதம் அடித்த பட்லர், முஜீப் ரஹ்மான் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஆர்ச்சர், முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதன் பின்னர், ஆட்டம் பஞ்சாப் கைக்கு வந்தது. இறுதியில், ஸ்ரேயஸ் கோபால் அதிரடியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு  152 ரன்கள் எடுத்தது. 16 பந்துகளில் கோபால் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி தரப்பில் முஜீப் ரஹ்மான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார். 

பின்னர், 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியில் ராகுல் மற்றும் கெயில் களமிறங்கினர். நிதானமாக ஆடிய கெயில் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அகர்வால், 2 ரன்னில் நடையைக் கட்ட, நம்பிக்கையுடன் பந்து வீசினர் ராஜஸ்தான் வீரர்கள். அடுத்து வந்த கருண் நாயரும் ராகுலும் ஜோடி சேர்ந்து நிதானமாக  ஆடினர். பின்னர், அதிரடிக்கு மாறிய கருண் நாயர், 31 ரன்னில் ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய அக்சர் பட்டேல், 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.  ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும், மறுபுறம் ராகுல் அதிரடியாக விளையாடினார். இறுதியில் அதிரடி காட்டிய ராகுல், 54 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். ஸ்டோனிஸ் 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.  ஆட்டநாயகனாக ராகுல் தேர்வுசெய்யப்பட்டார்.

இறுதியில், 18.4 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிபெற்று, தனது 6 வெற்றியைப் பதிவுசெய்தது. பஞ்சாப் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 3 வெற்றிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. Trending Articles

Sponsored