பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது! ஆஸி. கிரிக்கெட் வாரியத்துக்கு `நோ’ சொன்ன பி.சி.சி.ஐSponsoredஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரில் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அதிகாரபூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளது. 


இந்தாண்டு இறுதியில் இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வரும் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியைப் பகலிரவு போட்டியாக நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. 

Sponsored


இந்தநிலையில், ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளது. பிங்க் நிற பந்துகள் மூலம் விளையாடப்படும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கக் குறைந்தது 18 மாதங்களாவது அவகாசம் வேண்டும் எனப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட அணியின் நிர்வாகம், பி.சி.சி.ஐ நிர்வாகக் குழுவிடம் விளக்கமளித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இயலாது என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு பி.சி.சி.ஐ கடிதம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அணிகள், பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன. 
 

Sponsored
Trending Articles

Sponsored