பந்துவீச்சில் மீண்டும் கில்லி என நிரூபித்த ஹைதராபாத்; ஏமாற்றிய பெங்களூர்!#IPLSponsoredஐ.பி.எல் தொடரின் இன்றைய த்ரில் போட்டியில் ஹைதராபாத் அணி பெங்களூர் அணியை வீழ்த்தியது. 

Photo: Twitter/ipl

Sponsored


ஹைதராபாத் மைதானத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை தவானும், அலெக்ஸ் ஹேல்ஸும் தொடங்கினர். தொடக்கத்தில் பெங்களூர் அணியின் சிறப்பான பந்துவீச்சில் ரன் குவிக்கத் தடுமாறிய ஹைதராபாத் அணி, பின்னர் கேப்டன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் மிண்டது. வில்லியம்ஸன் 56 ரன்களிலும், ஷகிப் அல் ஹசன் 35 ரன்கள்லும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய யூசுப் பதான் தவிர பின்கள வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி, 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்தது. பெங்களூர் அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

Sponsored


பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கோலி படை. தொடக்க ஆட்டகாரர்களாக மன்னன் வோஹ்ரா மற்றும் பார்த்திவ் பட்டேல் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய பார்திவ், 4 பவுண்டரிகள் அடித்து 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கேப்டன் கோலி களமிறங்கினார். கேப்டன் கோலி களமிறங்கியதும் அதிரடியாக விளையாடினார். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் பெங்களூரு அணியின் ரன்ரேட் சிறப்பாகவே இருந்தது. 

நிதானமாக விளையாடிய வோஹ்ரா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணியில் ஷகிப் அல் ஹஸான் மற்றும் ரஷித் கான் சிறப்பாக பந்துவீசிக் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் இணைக்கு நெருக்கடி அளித்தது. ஷகிப் பந்துவீச்சில் கோலியும், ரஷித் கான் பந்துவீச்சில் டி வில்லியர்ஸும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அடுத்ததாகக் களமிறங்கிய மோயின் அலியும் 10 ரன்னில் ஆட்டமிழக்க, பெங்களூர் அணியின் ரன்ரேட் குறைந்தது. 

அதன் பின்னர் மந்தீப் சிங் மற்றும் கிராண்ட்ஹோம் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். கிராண்ட்ஹோம், ரஷித் கான் ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர் அடிக்க பெங்களூர் ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 19 ரன்கள் தேவை. இந்த ஓவரில் 7 ரன்கள் எடுக்கக் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை. இந்த ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். சிறப்பாகப் பந்துவீசிய புவனேஷ்வர் குமார், முதல் 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை. இந்தப் பந்தில் கிராண்ட்ஹோம் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வில்லியம்சன் ஆட்டநாயகநாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தொடர்ச்சியாக 4 வெற்றிகள் பெற்ற ஹைதராபாத் அணி 10 போட்டிகளில் 8 போட்டிகளில் வென்று முதலிடத்தில் உள்ளது. 3 வெற்றிகளுடன் பெங்களூர் அணி 6 வது இடத்தில் உள்ளது.  Trending Articles

Sponsored