`ஆஃப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட்’ - ரஹானே தலைமையில் களமிறங்கும் இந்திய அணி!



Sponsored



ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணிக்கு எதிராக விளையாடுகிறது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வரும் ஜூன் 14-ம் தேதி நடைபெறும் இந்தப் போட்டிக்காக ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் தயாராகி வருகிறார்கள். 

Sponsored


இந்தநிலையில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடருக்குத் தயாராகும் வகையில் கவுன்டி போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட இருக்கிறார். இதனால், அஜிங்கியா ரஹானே தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் புஜாரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் ஆஃப்கானிஸ்தான் டெஸ்டில் பங்கேற்கும் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

Sponsored


ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்டுக்கான இந்திய அணி விவரம்:

அஜிங்கியா ரஹானே (கேப்டன்),  ஷிகர் தவான், முரளி விஜய், கே.எல்.ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, கருண் நாயர், விருத்திமான் சாஹா, ரவிச்சந்திர அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா, ஸ்ரதுல் தாகுர். 

அதேபோல், அயர்லாந்து அணிக்கெதிரான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர், இங்கிலாந்து அணிக்கெதிரான தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி: 

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி, தினேஷ் கார்த்திக், யுஷ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ். 

இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரிலும் இதே அணி பங்கேறும் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அறிவித்துள்ளது. 

இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், அம்பாதி ராயுடு, எம்.எஸ்.தோனி, தினேஷ் கார்த்திக், யுஷ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ். 
 



Trending Articles

Sponsored