ரிஷப் பன்ட் விஸ்வரூபம்! 187 ரன்கள் குவித்த டெல்லி #DDvsSRHSponsoredசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. 

Photo Credit: Twitter/IPL

Sponsored


புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஹைதராபாத் மற்றும் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணிகள் மோதிய போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்கம் மந்தமாகவே இருந்தது. 4 ஓவர்கள் முடிவில் 21 ரன்கள் எடுத்திருந்த டெல்லி அணி, தொடக்க வீரர்கள் இருவரையுமே இழந்திருந்தது. பிரித்வி ஷா 11 ரன்களிலும், ஜேசன் ராய் 9 ரன்களிலும் ஷகிப் அல்ஹசன் வீசிய 4-வது ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 3 ரன்கள் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால், 7.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் என்ற நிலையில் டெல்லி அணி தடுமாறிக் கொண்டிருந்தது.

Sponsored


அடுத்து வந்த ஹர்ஷல் படேலுடன் கைகோத்த ரிஷப் பன்ட், அதிரடியாக ரன் குவிக்கத் தொடங்கினார். ஆனால், இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 4-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஹர்ஷல் படேல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை, மறுமுனையில் நிறுத்தி ரிஷப் பன்ட் ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கினார். 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் இந்த ஜோடி குவித்தபோது, அதில் மேக்ஸ்வெல்லின் பங்கு வெறும் 4 ரன்களே. மற்றவை ரிஷப் கணக்கில் சேரும். இறுதிவரை அதிரடி காட்டிய ரிஷப் பன்ட், 63 பந்துகளில் 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில் 7 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடங்கும். ரிஷப் பன்ட் அசத்தல் சதத்தால், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. குறிப்பாக புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என ரிஷப் பன்ட் 26 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். Trending Articles

Sponsored