பட்லர் அதிரடியில் வீழ்ந்த சென்னை! ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் ராஜஸ்தான்!



Sponsored



ஐ.பி.எல் தொடரில் இன்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

Photo: Twitter/IPL

Sponsored


இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற சென்னை முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. ராயுடு 12 ரன்னில் ஆட்டமிழக்க வாட்சன் ரெய்னா ஜோடி நிதானமாகவும், அதே நேரத்தில் மோசமான பந்துகளை பவுண்டரிகளுக்கும் அனுப்பியது. இதனால் முதல் 10 ஓவர்களில் சென்னை சிறப்பான ரன் ரேட்டில் இருந்தது. ரெய்னா அரைசதம் அடித்தார்.  12 ஓவரில் வாட்சனும்(39), 13 -வது ஓவரில் ரெய்னாவும்(52) ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் தோனியும், பில்லிங்ஸ்யும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி விக்கெட் கொடுக்காமல் விளையாடினாலும் பெரிதாக ரன் ரேட்டை உயர்த்த முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தோனி ஆட்டமிழக்காமல் 33 ரன்களுடன் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். 

Sponsored


பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி. பட்லருடன் ஸ்டோக்ஸ் தொடக்க ஆட்டகாரராக களமிறங்கினார். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளைடியாடினர். ஸ்டோக்ஸ் 11 ரன்னில் ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஹானே 4 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்னர் சஞ்சு சாம்சன் மற்றும் பட்லர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சாம்சன் 21 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஒரு புறம் விக்கெட் விழுந்தாலும் பட்லர் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடினார்.  கடைசிக் கட்டத்தில் களமிறங்கிய கவுதம் 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் வெற்றி பெற 12 ரன்கள் தேவை. கடைசி ஓவரை பிராவோ வீசினார்.    இந்த ஓவரில் 4 -வது பந்தில் சிக்சர் அடித்து பட்லர் ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தார். 19.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் 95 ரன்கள் எடுத்தார்.  இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் ராஜஸ்தான் தன்னையும் சேர்த்துக்கொண்டது.



Trending Articles

Sponsored