`டியர் ஃபெலிக்ஸ்’ - நியூஸி. சிறுவனின் வேண்டுகோளை நிறைவேற்றிய யூனிஸ் கான்!Sponsoredநியூசிலாந்தைச் சேர்ந்த சிறுவன், பேட்டிங் டிப்ஸ் கேட்டு எழுதிய கடிதத்துக்கு வீடியோ மூலம் பதிலளித்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் எவர் க்ரீன் பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் யூனிஸ் கான். பாகிஸ்தான் அணிக்காக 17 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள யூனிஸ் கான், கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 10,099 ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல், 265 ஒருநாள் போட்டிகளின் மூலம் 7,249 ரன்கள் சேர்த்துள்ளார். 

Sponsored


Sponsored


இந்தநிலையில், யூனிஸ் கான் ட்விட்டரில் நியூஸிலாந்தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் ஃபெலிக்ஸ் எழுதிய கடிதம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்தக் கடிதம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது என்று தெரிவித்துள்ள யூனிஸ் கான், அந்தக் கடிதம் குறித்த தகவல் தற்போதுதான் தனக்குக் கிடைத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், `` என்னுடைய பெயர் ஃபெலிக்ஸ். எனக்கு 10 வயதாகிறது. நான் நியூஸிலாந்தில் வசித்து வருகிறேன். என்னுடைய ஹீரோக்களில் நீங்கள் முக்கியமானவர் என்பதால், இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். உங்கள் பேட்டிங் டெக்னிக் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமானது. உங்கள் கவர் ட்ரைவ் எப்பொழுதும் முழுமையானதாகவே இருக்கிறது. இலங்கை அணிக்கெதிராக 318 ரன்கள் குவித்த உங்கள் இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானது. ஒரு கிரிக்கெட்டராக மாறி, மூன்றாவது வீரராகக் களமிறங்க வேண்டும் என்பதற்கான உந்துதலை அந்த இன்னிங்ஸ் எனக்கு அளித்தது. மேலும், இங்கிலாந்து அணிக்கெதிராக இந்த ஆண்டு நீங்கள் குவித்த 218 ரன்கள், உங்களின் சிறப்பான இன்னிங்ஸ். அதேபோல், நீங்கள் மிகச்சிறந்த ஸ்லிப் ஃபீல்டர் மற்றும் நம்பகமான பேட்ஸ்மேன். உங்கள் கவர் ட்ரைவ், கட் ஷாட் குறித்து எனக்கு டிப்ஸ் கொடுக்க முடியுமா?. உங்கள் அடுத்தடுத்த போட்டிகளுக்கு எனது வாழ்த்துகள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் ஃபெலிக்ஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வீடியோ மூலம் கவர் ட்ரைவ் குறித்து யூனிஸ் கான் டிப்ஸ் கொடுத்துள்ளார். மேலும், தேசிய அணிக்காக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஃபெலிக்ஸூக்கு வாழ்த்துகளையும் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.  
 Trending Articles

Sponsored