`உடைந்த கண்ணாடியால் ரசிகர்களிடம் சிக்கினேன்' -சச்சின் டெண்டுல்கரின் `ரோஜா’ பட அனுபவம்Sponsoredமாறுவேடத்தில் `ரோஜா' படத்தை திரையரங்கில் பார்த்தபோது ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டுவிட்டதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

பிரபலமானவர்கள், பொது இடங்களில் சுதந்திரமாகச் செல்லமுடியாது. இதனால் மாறுவேடங்களில் ரகசியமாகச் செல்வதை சில பிரபலங்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய மாறுவேட அனுபவத்தை `பிரேக் ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்' எனும் நிகழ்ச்சியில் கௌரவ் கபூருடன் பகிர்ந்துள்ளார்.  

Sponsored


இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, ``எனக்குத்  திரையரங்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்டநாளாக இருந்தது. கிரிக்கெட், என பிஸி ஷெடுல் காரணமாக என்னால் திரையங்குக்குச் செல்ல முடியவில்லை. கடந்த 1994-ம் ஆண்டு, என் மனைவி அஞ்சலியை அழைத்துக் கொண்டு சினிமா பார்க்க திரையரங்கு செல்ல விரும்பினேன். ஆனால், ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்ற பயத்தால் தயங்கினேன். 

Sponsored


அப்போது அஞ்சலியும், அவரின் தந்தையும், என் நண்பர்கள் சிலரும் ரசிகர்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு சினிமா பார்க்க ஏற்பாடு செய்தனர். நான், தாடி, தொப்பி, கண்ணாடி அணிந்து `ரோஜா’ படம் பார்க்க வோர்லியில் உள்ள திரையரங்குக்குச் சென்றோம். இடைவேளை வரை எந்தப் பிரச்னையும் வரவில்லை. 

இடைவேளையின் போது, நானும் எனது நண்பர்களும் வெளியில் சென்றோம். அப்போது திடீரென எனது கண்ணாடி கீழே விழுந்து ஒரு லென்ஸ் உடைந்துவிட்டது. அதை மீண்டும் மாட்டிக் கொண்டு உள்ளே சென்றேன். அப்போது, ரசிகர் ஒருவர் என்னை அடையாளம் கண்டுவிட்டார். திரையரங்கு முழுவதும் தகவல் பரவி, ஒரு கூட்டம் என்னை நோக்கி வரத் தொடங்கியது. இதனால் உடனடியாக அங்கிருந்து வெளியில் வந்துவிட்டேன். அப்போது எல்லாம் வாட்ஸ் அப், செல்போன் இல்லை. இல்லையென்றால் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கியிருப்பேன்'' என்றார்.Trending Articles

Sponsored