`31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி’ - பிளே ஆஃப் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்ட கொல்கத்தா! #KXIPvsKKRSponsoredபஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி, 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Photo Credit: Twitter/IPL

Sponsored


மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, சுனில் நரேன் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது. நடப்பு ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பஞ்சாப் தரப்பில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Sponsored


246 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, தொடக்கமே சிறப்பாகவே அமைந்தது. நரேன் வீசிய முதல் ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசி, ராகுல் அதிரடி தொடக்கம் கொடுத்தார். 5.4 ஓவர்களில் பஞ்சாப் அணி 57 ரன்கள் எடுத்திருந்த போது, 21 ரன்களில் கெயில் வெளியேறினார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் மற்றும் கருண் நாயர் ஆகியோர் ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய கே.எல்.ராகுல், 29 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நல்ல ஸ்கோர் இருந்தும் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தவண்ணம் இருந்தன. ஆரோன் பின்ச் 34 ரன்களிலும், அஷ்வின் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி, புள்ளிப்பட்டியலின் முதல் 4 இடங்களுக்குள் மீண்டும் இடம்பிடித்தது.       Trending Articles

Sponsored