`ஸ்பின்னருக்குப் பதில் வேகப்பந்து வீச்சாளர்!’ - ஹைதராபாத்துக்குச் செக் வைக்குமா தோனியின் வியூகம் #CSKvsSRHSponsoredசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள இவ்விரண்டு அணிகள் மோதும் போட்டி புனே மைதானத்தில் நடக்கிறது. இரு அணிகளுமே தலா 11 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், ஹைதராபாத் 9 வெற்றிகளும், சென்னை 7 வெற்றிகளும் பெற்றுள்ளன. ஹைதராபாத் அணி ஏற்கெனெவே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், முதலிடத்தைத் தக்கவைக்கும் நோக்கில் களமிறங்குகிறது. அதேநேரம், சென்னை அணி, இந்த போட்டியில் வெற்றிபெறும் சூழலில் முதலிரண்டு இடங்களில் லீக் சுற்றை நிறைவு செய்யும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொள்ளும். ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியை வென்ற 2 அணிகளில் சென்னை அணியும் ஒன்று. 

Sponsored


இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் இரு அணிகளிலுமே தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அணியில் சுழற்பந்துவீச்சாளர் கரண் ஷர்மாவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், ஹைதராபாத் அணியில் யூசுப் பதானுக்குப் பதிலாக, தீபக் ஹூடா பிளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored