`பகலிரவு டெஸ்டில் விளையாட இந்தியா விருப்பம் தெரிவிக்காததற்கு காரணம் இதுதான்!' - இயான் சேப்பல் விமர்சனம்Sponsoredதோல்வியைத் தவிர்க்கவே இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இந்திய அணி தவிர்த்திருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கருத்துத் தெரிவித்துள்ளார். 

Photo Credit: Cricket.com.au

Sponsored


இந்தாண்டு இறுதியில் இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வரும் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியைப் பகலிரவு போட்டியாக நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. ஆனால். பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகாரபூர்வ கடிதம் மூலம் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து விட்டது. 

Sponsored


இந்தநிலையில் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்காகது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சேப்பல், ``இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவு ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக பகலிரவு டெஸ்ட் போட்டிகள் அடிலெய்டு மைதானத்தில் விளையாடப்பட்டு வருகின்றன. இந்திய அணி போன்ற வலிமையான அணி, அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சிறப்பானதாக இருந்திருக்கும். இந்த போட்டியில் கலந்துகொள்ளாததற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்ன காரணம் சொன்னாலும், அது ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கும். அனுபவம் குறைந்த அணியை வீழ்த்துவதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கிலேயே பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது’ என்று விமர்சித்துள்ளார். கிரிக்கெட் இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில், இந்த கருத்துகளை இயான் சேப்பல் பகிர்ந்துள்ளார்.  Trending Articles

Sponsored