கோலி அசத்தினால்... அஷ்வினுக்கு தோனி சர்ப்ரைஸ் தந்தால்... ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?!Sponsoredகர்நாடகாவில் யாருக்கு எத்தனை எம்.எல்.ஏ என அரசியல் கணக்கு உச்சத்தில் நடந்துகொண்டிருக்க, ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் கணக்கு ஆரம்பித்துவிட்டது. ஐதராபாத், சென்னை அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டன. ஆனால், மூன்றாவது, நான்காவது இடத்துக்கு ஐந்து அணிகள் போட்டிபோடுவதுதான் 2018 ஐபிஎல்-ன் ஸ்பெஷல். கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் என ஐந்து அணிகளுக்குமே ப்ளே ஆஃப்க்குள் நுழையும் வாய்ப்பு இருக்கிறது.

மும்பைக்கு வாய்ப்பு!
பஞ்சாபுடனான வெற்றியின் மூலம் மும்பையின் ப்ளே ஆஃப் கனவு நிஜமாகும் சூழல் உருவாகியிருக்கிறது. மும்பை, ராஜஸ்தான், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மூன்று அணிகளும் 12 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கின்றன. கொல்கத்தா 14 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்த நான்கு அணிகளுக்குமே இன்னும் ஒரேயொரு போட்டிதான் உள்ளது.

Sponsored


மும்பை இப்போது புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில், அதாவது ஐதராபாத், சென்னை, கொல்கத்தாவுக்கு அடுத்ததாக இருக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியை கடைசிப் போட்டியில் சந்திக்கிறது மும்பை. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மும்பை ப்ளே ஆஃப்க்குள் நுழைந்துவிடும். அப்படியே தோல்வியடைந்தாலும் மும்பைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் ஹைலைட். பஞ்சாப்  சென்னையிடமும், ராஜஸ்தான் பெங்களூரிடமும் தோல்வியடைந்தால் மும்பை உள்ளே சென்றுவிடும். அதேபோல் ஐதராபாத், பெங்களூரைத் தோற்கடிக்க வேண்டும். இது நடந்தால் டெல்லியுடனான போட்டியில் தோல்வியடைந்தாலும் 12 புள்ளிகளுடன் மும்பை டாப் -4 இடத்துக்குள் வந்துவிடும்.

Sponsored


பஞ்சாப் பஞ்சாயத்து!

பஞ்சாப் இந்த லீகின் கடைசிப் போட்டியாக சென்னையை வரும் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது. அந்தப் போட்டியில் சென்னையை வீழ்த்தினால் மட்டுமே பஞ்சாப் ப்ளே ஆஃப்க்குள் நுழைந்துவிட முடியாது. மும்பை டெல்லியிடம் தோல்வியடைய வேண்டும். பெங்களூரு அணி ராஜஸ்தான், ஐதராபாத் என அடுத்து ஆடும் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும். அப்படி நடந்தால் மும்பையும், ராஜஸ்தானும் 12 புள்ளிகளுடன் பின்தங்க, 14 புள்ளிகளுடன் பஞ்சாப் ப்ளே ஆஃப்க்குள் நுழையும்.

கோலிக்குக் கடைசி வாய்ப்பு!
ரன்ரேட் அடிப்படையில் மும்பையைப் பின்னுக்குத் தள்ளும் வாய்ப்பு பெங்களூரு அணிக்குத்தான் இருக்கிறது. பஞ்சாபை 88 ரன்களுக்குள் சுருட்டி, 8 ஓவர்களில் சேஸ் செய்து வென்றதுபோல, அடுத்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றிபெறவேண்டும். அப்படி நடந்தால் 12 புள்ளிகளே எடுத்திருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் மும்பையை பெங்களூரு முந்தும். அப்படி இல்லையெனில் ஐதராபாத், ராஜஸ்தானுடனான இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 14 புள்ளிகள் பெறவேண்டும். அப்படி 14 புள்ளிகள் பெற்றாலும் பெங்களூரு ப்ளே ஆஃப்க்குள் நுழைய முடியாது. அப்படி நுழைய வேண்டும் என்றால் மும்பை டெல்லியிடமும், கொல்கத்தா ஐதராபாத்திடமும் தோல்வியடைய வேண்டும். 

ராஜஸ்தானுக்கும் ராசி உண்டு!
ராஜஸ்தான் கடைசிப் போட்டியில் பெங்களூரை வென்று 14 புள்ளிகள் பெறவேண்டும். அதற்கு மும்பை அடுத்த போட்டியில் டெல்லியிடம் தோல்வியடைய வேண்டும். பெங்களூரு ஐதராபாத்திடம் தோல்வியடைய வேண்டும். 

என்னவாகும் கொல்கத்தா?!
ஐதராபாத்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் வெற்றிபெற்றால் கொல்கத்தா 16 புள்ளிகளுடன் ஈஸியாக மூன்றாவது அணியாக ப்ளே ஆஃப்க்குள் நுழைந்துவிடும். ஆனால், ஐதராபாத்திடம் தோல்வியடைந்தால் கொல்கத்தாவின் கதை சிக்கலில் முடியும். மும்பை, டெல்லியிடம் வெற்றிபெற்றால், பெங்களூரு அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் ரன் ரேட் அடிப்படையில் இரண்டு அணிகளும் கொல்கத்தாவைப் பின்னுக்குத்தள்ளி உள்ளே நுழைந்துவிடும்!

கணக்குகள் தொடரும்!Trending Articles

Sponsored