`மகளிர் ஐபிஎல் தொடருக்கான முன்னோட்டம்' - காட்சிப் போட்டிக்கான அணியை அறிவித்தது பி.சி.சி.ஐ!Sponsoredமகளிர் ஐபிஎல் தொடர் முன்னோட்டமான காட்சிப் போட்டிக்கான அணிகளை பி.சி.சி.ஐ  அறிவித்துள்ளது. 

photo credit : BCCI

Sponsored


11-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. லீக் ஆட்டங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. லீக் சுற்றில் இன்னும் 5 ஆட்டங்களே உள்ளன. ஏற்கெனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு இடத்துக்கு கடும் போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில், 11 ஆண்டுகளாக நடைபெறும் ஆண்கள் ஐபிஎல் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, மகளிர் ஐபிஎல் தொடரை அடுத்த ஆண்டு முதல் தொடங்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது. 

Sponsored


இதற்கு முன்னோட்டமாக இந்த வருடம் காட்சிப் போட்டி ஒன்றை நடத்த பி.சி.சி.ஐ தீர்மானித்துள்ளது. 22-ம் தேதி நடைபெறவுள்ள குவாலிபையர் ஆட்டத்துக்கு முன்பாக இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதற்காக ஸ்மிர்தி மந்தனா தலைமையில் ஐபிஎல் டிரெயில் பிளேஸர்ஸ் என்ற அணியும், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் ஐபிஎல் சூப்பர்நோவாஸ் என்ற அணியும் தேர்வு செய்யப்பட்டு இதில் விளையாடவுள்ள வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில்,  ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி, பெத் மூனி மற்றும் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பிளேயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

இரு அணிகளிலும் இடம்பிடித்துள்ள வீராங்கனைகள் விவரம்; 

ஐபிஎல் சூப்பர்நோவஸ்: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), மித்தாலி ராஜ், மெக் லேனிங், ஷோபி டெவைன்,  தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்) எலிசே பெர்ரி, வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ரம், பூஜா வாஸ்டிராகர்,  மேகன் ஸ்கட், ராஜேஸ்வரி கயாக்வாட்,  அனுஜா பாட்டீல். 

ஐபிஎல் டிரைல்ப்ளேசர்ஸ்: ஸ்மிர்தி மந்தனா (கேப்டன்), தீப்தி ஷர்மா, ஜூலான் கோஸ்வாமி, அலிசா ஹீலி (விக்கெட் கீப்பர்), சுசி பேட்ஸ், பெத் மூனி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், டேனியல்லே ஹசல், ஷிகா பாண்டே, லியா டகுகு, ஏக்தா பிஸ்ட், தயாளன் ஹேமலதா, பூணம் யாதவ்.Trending Articles

Sponsored