கார் விபத்தில் சிக்கிய கிரி்க்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவிமீது போலீஸ் தாக்குதல்Sponsoredகிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாட தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுவருகிறது. இந்த அணி, மும்பையில் ஹைதராபாத்  சன்ரைசர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில், ஜடேஜாவின் மனைவி ரிவபா, காரில் தனது குழந்தையுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் திடீரென்று முன்னே சென்றுகொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அகிரின் பைக் மீது மோதிவிட்டது. அதனால், ஜடேஜாவின் மனைவி காரை விட்டு இறங்கினார்.

அப்போது, ஆத்திரமடைந்த போலீஸ் கான்ஸ்டபிள்  சஞ்சய்,  ஜடேஜா மனைவியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதுகுறித்து விவரம் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள், விரைந்து வந்து சஞ்சய்யைத் தடுத்து நிறுத்தி அவர்களை மீட்டனர். இந்தத் தாக்குதலில், அவருக்கு காயம் ஏற்பட்டது.  பெண் மீது தாக்குதல் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க  விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Sponsored


Sponsored


Sponsored