`கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ரஷீத் கான்' - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 174 ரன்கள் குவிப்பு! #Qualifier2ஐபிஎல் குவாலிஃபையர் இரண்டில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 174 ரன்கள் குவித்துள்ளது.

Sponsored


photo credit :@ipl

Sponsored


ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஏற்கெனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதப்போகும் அணியைத் தீர்மானிக்கும் குவாலிஃபையர் 2 போட்டி இன்று நடைபெறுகிறது. ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில், முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். கொல்கத்தா அணியின் ஷிவம் மவி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். ஹைதராபாத் அணியில் சர்மா, கோஷ்வாமி, மனிஷ் பாண்டே ஆகியோருக்குப் பதிலாக விருத்திமான் சஹா, தீபக் ஹூடா, அஹமது உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.

Sponsored


அதன்படி, ஹைதராபாத் அணிக்கு இந்த முறை ஷிகர் தவானுடன் - விருத்திமான் சஹா களமிறங்கினார். இருவரும் பொறுப்பாக ஆடினர். 34 ரன்கள் எடுத்தபோது ஷிகர் தவான் முதல் ஆளாக வெளியேற, அதன்பின் கேப்டன் வில்லியம்சன் 3 ரன்களுக்கு அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து சகாவும் 35 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொதப்ப, தொடர்ந்து விக்கெட் சரிவு ஏற்பட்டது. இருப்பினும், கடைசி ஓவரில் ரஷீத் கான் அதிரடி காட்டினார். அவர் 10 பந்துகளில் 34 ரன்கள் விளாச, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. Trending Articles

Sponsored