`சூழ்ச்சி கடந்து போராடிக் கிடைத்த வெற்றி' - தமிழில் ட்வீட் செய்து அதிர்ந்த ஹர்பஜன் சிங்Sponsoredஐபிஎல் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. `மக்கள் சக்தியாக, பல சூழ்ச்சி கடந்து போராடி கிடைத்த வெற்றி' என நெகிழ்ந்து, தமிழில் ட்வீட் செய்துள்ளார் ஹர்பஜன் சிங். 

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில், சென்னை அணி டாஸ் வென்று,  கேப்டன் தோனி, ஃபீல்டிங்கை தேர்வுசெய்தார். இதையடுத்துக் களமிறங்கிய ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அதன்பின், களமிறங்கிய சென்னை அணியின் இன்னிங்ஸை வாட்சன் மற்றும் டு ப்ளஸி ஆகியோர் தொடங்கினர். தொடக்கம் முதல் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி வீரர்கள், ஹைதராபாத் அணி நிர்ணயித்த இலக்கை 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றிபெற்றது. 

Sponsored


இரண்டு ஆண்டு தடைக்குப்பின், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சென்னை அணி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. சென்னை அணியின் அபார வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பிய ஹர்பஜன் சிங், வெற்றி வாகை சூடிய தருணங்களை உருக்கமாகத் தமிழில் எழுதிப் பதிவிட்டுள்ளார். 

Sponsored


அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், `தோட்டாவெனக் கிளம்பிய பந்துகள், கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி ஐபிஎல் கோப்பையை வென்றோம். எமை அடித்து, அழுத்தி ஆட(ள) முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி கடந்து போராடிக் கிடைத்த வெற்றி, சென்னை மக்களுக்கு சமர்ப்பணம். மக்களை வென்றதே நமது வெற்றி. சுட்டாலும் சங்கு வெண்மையே' எனப் பதிவிட்டுள்ளார். Trending Articles

Sponsored