2018 உலகக் கோப்பை கால்பந்து ரஷ்யாவில்... டிக்கெட் போதும்... விசா தேவையில்லை! #WorldCup2018Sponsoredலகக் கோப்பை கால்பந்து தொடரை, ரஷ்யா முதன்முறையாக ஏற்று நடத்துகிறது. செலவு, கிட்டத்தட்ட 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்! ரஷ்ய அரசு 6.7 பில்லியன் டாலர்களும் மாகாண அரசுகள் 1.5 பில்லியன் டாலர்களும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 3.4 பில்லியன் டாலர்களும் இந்தப் போட்டிக்காகச் செலவழித்துள்ளன. ரஷ்யாவில் மாஸ்கோ, சோச்சி, பீட்டர்ஸ்பர்க், கஸான் உள்ளிட்ட நகரங்களில் 12 மைதானங்களில் மொத்தம் 64 போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிக்காக ரஷ்யா முழுவீச்சில் தயாராகிவருகிறது. இத்தாலி, நெதர்லாந்து போன்ற சாம்பியன் அணிகள் இல்லாதது, போட்டியின் சுவாரஸ்யத்தைக் குறைக்காது என்று நம்பப்படுகிறது. எகிப்து போன்ற புதுமுக அணிகள் திறமையை நிரூபிக்கப் போராடலாம். இந்த உலகக் கோப்பைதான் 32 அணிகளுடன் விளையாடப்படும் கடைசி தொடர். 2022-ம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பை முதல், 48 அணிகள் களமிறங்கப்போகின்றன. 16 அணிகளுக்குப் புதியதாக உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். 

ரஷ்ய உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ள 12 மைதானங்களில் 9 மைதானங்கள், புதிதாகக் கட்டப்பட்டவை. மாஸ்கோவில் உள்ள லுக்கினிக்கி மைதானத்தில் தொடக்க ஆட்டம் மற்றும் இறுதி ஆட்டம் நடைபெறுகின்றன. இந்த மைதானத்தில் 82 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியைக் காண முடியும். உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில், குறைந்தது 35 ஆயிரம் இருக்கைகள் இருக்க வேண்டும். நான்கு லீக் ஆட்டங்கள்  நடைபெறவுள்ள Ekaterinburg Arena மைதானத்தில், 27 ஆயிரம் பேர்தான் அமர்ந்து போட்டியைக் காண முடியும். இருக்கைகளில் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஃபிஃபா கேட்டுக்கொண்டது. கேலரியைப் புதியதாகக் கட்டினால் மட்டுமே இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். அதனால், தொழில்நுட்ப வல்லுநர்கள் வித்தியாசமாகச் சிந்தித்து, இரு கோல் கம்பத்துக்கும் பின் பகுதியில் கேலரிகள் புதிதாக எழுப்பினர். தற்போது, இந்த மைதானத்தில் 45 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியைக் காண முடியும். உலகக் கோப்பை முடிந்தவுடன் இந்த கேலரிகள் அகற்றப்பட்டுவிடும். 

Sponsored


உலகக் கோப்பை போட்டியைக் காண ரஷ்யா செல்பவர்களுக்கு விசா தேவையில்லை. போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு,  Fan-ID ரஷ்ய அரசால் வழங்கப்படும். ரஷ்யா சென்று போட்டியைக் கண்டுகளித்து வெளியேறும் வரை இந்த ஐ.டி போதுமானது. அதேவேளையில், பாஸ்போர்ட் அல்லாத பிற ஆவணங்கள், டிக்கெட் வாங்கியதற்கான சான்று போன்றவற்றை அவசியம் வைத்திருக்க வேண்டும். 

Sponsored


ரஷ்ய உலகக் கோப்பையில், 45 வயது வீரர் ஒருவரும் விளையாட உள்ளார். எகிப்து அணியின் கோல்கீப்பர் எல் ஹத்ரி `அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்.  எகிப்து அணிக்காக இவர் 156 சர்வதேசப்  போட்டிகளில் எல் ஹத்ரி விளையாடியுள்ளார். கொலம்பிய கோல்கீப்பர் ஃபாரீத் மான்ட்ரெகன் 43 வயதில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடியதே இதற்கு முன் சாதனையாக இருந்தது. ரஷ்ய உலகக் கோப்பைத் தொடரில் எல் ஹத்ரி களமிறங்கும்பட்சத்தில் புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த உலகக் கோப்பைத் தொடரின் தர வரிசையில் கடைசி இடத்தில் உள்ள அணி எது என்று பார்த்தால், அது போட்டியை நடத்தும் ரஷ்யாதான். உலகத் தரவரிசையில் ரஷ்யா 65-வது இடத்தில் இருக்கிறது. முதல் ஆட்டத்தில் ரஷ்ய அணி தரவரிசையில் 63-வது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவைச் சந்திக்கிறது. 

ரஷ்ய உலகக் கோப்பையில் பரிசுத்தொகையாக 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளிக்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளுக்கும் 8 மில்லியன் டாலர்கள் கிடைக்கும். இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினால் மேலும் 4 மில்லியன் டாலர். கால் இறுதிக்கு முன்னேறினால் அடுத்ததாக 4 மில்லியன் டாலர் கணக்கில் சேரும். அரை இறுதியில் தோற்று மூன்றாவது இடத்துக்கான பிளே ஆஃப்  சுற்றில் விளையாடும் அணிகளுக்கு 46 மில்லியன் டாலர் பரிசு உள்ளது. இந்தச் சுற்றில் வெற்றி பெறும் அணிக்கு 24 மில்லியன் டாலரும், தோற்கும் அணிக்கு 22 மில்லியன் டாலரும் வழங்கப்படும். இறுதி ஆட்டத்தில் தோற்கும் அணிக்கு 28 மில்லியன் டாலரும், சாம்பியன் அணிக்கு 38 மில்லியன் டாலர்களும் பரிசாக வழங்கப்படும். இதுதவிர, அனைத்து அணிகளுக்கும் தலா 1.5 மில்லியன் டாலர்கள் போனஸாகக் கிடைக்கும்.Trending Articles

Sponsored