சந்தோஷத்தில் சச்சின் - இந்திய ஜூனியர் அணிக்கு தேர்வானார் அர்ஜுன் டெண்டுல்கர் !



பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

Sponsored


கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என வர்ணிக்கப்பட்டவர் சச்சின் டெண்டுல்கர். கடந்த 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றார். ஓய்வுக்கு பின் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பது என சச்சின் இருந்து வருகிறார். போதாக்குறைக்கு எம்பியாகவும் அவர் இருந்து வருகிறார். இவரைப் போலவே அவரது மகன் அர்ஜுனும் கிரிக்கெட்டில் ஆர்வமாக உள்ளார். ஆனால் தந்தையை போல் பேட்ஸ்மேனாக இல்லாமல் ஆல் ரவுண்டராக முயற்சித்து வருகிறார். 18 வயதாகும் இவர் தற்போது உள்ளூர் போட்டிகளில் அசத்தி வருகிறார். அதற்கு சான்றே இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடத்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 27 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். 

Sponsored


மேலும் இங்கிலாந்து வீரர்களுக்கு பந்துவீசுவது, ஐபிஎல் போட்டிகளின் போது மும்பை வீரர்களுடன் வலைப்பயிற்சியில் ஈடுபடுவது என பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் தான், அர்ஜுனை  19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இந்த மாதம் 11ம் தேதி இலங்கைக்கு எதிராக இரண்டு நான்கு நாள் போட்டி, ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய இளம் படை விளையாடவுள்ளது. இதில் நான்கு நாள் போட்டியில் விளையாடுவதற்காக தான் அர்ஜுன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்முறையாக அவர் இந்திய இளையோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவர் டிராவிட் பயிற்சியின் கீழ் முதல்முறையாக விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sponsored


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின், ``இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அர்ஜுனின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது மைல்கல். அவர் வெற்றியடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவருடைய விருப்பங்களுக்கு நானும், அஞ்சலியும் எப்போதும் உறுதுணையாக இருப்போம்'' என தெரிவித்துள்ளார். 



Trending Articles

Sponsored