`அவர் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர்' - சேவாக் குறித்து நெகிழ்ந்த சச்சின்!Sponsoredஇந்திய அணியில் சேவாக் இணைந்த போது அவர் மிகவும் கூச்ச சுபாவம் உடையவராக இருந்தார் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட்டில் சிறந்த ஓப்பனிங் ஜோடியாக கருதப்படுவது சச்சின் - சேவாக் இணை தான். உலகின் முதல் தர பந்துவீச்சாளர்கள் முதல் அனைவரையும் இந்த ஜோடி ஆட்டம் காண வைத்துள்ளது. இருவரும் பல ஆட்டங்களில் சிறந்த பாட்னர்ஷிப்பை வழங்கியுள்ளனர். இந்நிலையில் `வாட் தி டக் 3 (What the Duck 3)’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சச்சின்  டெண்டுல்கரும், சேவாக்கும் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். சேவாக் குறித்து சச்சின் கூறுகையில், ``அணிக்கு புதிதாக சேவாக் வந்தபோது என்னிடம் அதிகாமாக பேசமாட்டார். இது இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என நினைந்தேன். காரணம் இருவரும் ஓப்பனிங் பேட்டிங் செய்ய வேண்டுமென்றால் கண்டிப்பாக ஒருவருக்கொருவர் பேசவேண்டும். அப்போது தான் ஒரு புரிதல் இருக்கும். அவரை பழக்கப்படுத்துவற்காக சாப்பிடுவதற்கு அழைத்து சென்றேன். சாப்பிடுவதற்கு முன் நான் அவரிடம் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு `நான் சைவம்' என்றார். எதற்கு சைவம் சாப்பிடுகிறீர்கள் எனக் கேட்டதற்கு ``சிக்கன் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும். ஆனால் பின்னர் அவரை நான் தான் அசைவம் சாப்பிட வைத்தேன்'' என்று கூறினார். 

Sponsored


இதேபோல் சச்சின் குறித்து சேவாக் கூறுகையில் ‘‘நான் மிகவும் கூச்ச சுபாவம் உடையவன். அணியில் இணையும்போது மிகவும் வெட்கப்பட்டேன். முதன்முறையாக சச்சினை பார்த்த போது, என்னுடன் கைக்குலுக்கி விட்டு சென்றுவிட்டார். என்னுடைய கிரிக்கெட் ஆசைக்கு காரணமே சச்சின் தான். அவரிடமே நான் கைகுலுக்கி விட்டோம் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். பின்னர், நான் சீனியர் வீரராக மாறியபோது, அதையே புதிய வீரர்களிடம் செய்தேன். பின்னர், எந்தவொரு மனிதரிடமும் அவரைப் பற்றி தெரிவதற்கு முன் நெருக்கமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன்’’ என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored