மெஸ்ஸியின் சாதனையைச் சமன்செய்த சுனில் சேத்ரி - இந்திய கால்பந்து அணி சாதனை!Sponsored'கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார்' என்று கூறப்படும் லயோனல் மெஸ்ஸியின் சாதனையைச் சமன்செய்துள்ளார், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி.

இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடர் மும்பையில் நடந்துவருகிறது. 4 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, கென்யா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலையில் இருந்தன. கோல் வித்தியாச அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - கென்யா அணிகள் மோதின.

Sponsored


ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில், இந்திய வீரர் சுனில் சேத்ரி முதல்கோல் அடித்தார். 29-வது நிமிடத்தில், அவரே 2-வது கோலையும் அடித்தார். இதன்மூலம் சர்வதேசப் போட்டிகளில் 64 கோல்கள் அடித்து கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் லயோனல் மெஸ்ஸியின் சாதனையைச் சமன்செய்துள்ளார், இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. இதையடுத்து, இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. கென்யா அணி இறுதி வரை கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து, 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Sponsored
Trending Articles

Sponsored