உலகக் கோப்பைக் கால்பந்து... முதல் போட்டியில் சவுதியை துவம்சம் செய்த ரஷ்யா!Sponsoredஉலகக் கோப்பைக் கால்பந்து 2018-ம் ஆண்டின் முதல் போட்டியில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி 3 புள்ளிகளைப் பெற்றது.

உலகக்கோப்பைக் கால்பந்து தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். முந்தைய தொடர் 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்தது. அதில், ஜெர்மனி அணி வாகை சூடியது. 21-வது உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி ரஷ்யாவில் நேற்று இரவு 8.30 மணிக்குத் தொடங்கியது. 

Sponsored


நேற்று இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவுடன் உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியது. விழாவில் இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியைத் தொடங்கிவைத்தார்.

Sponsored


உலகக் கோப்பையில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றான நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

21-வது உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதின. போட்டி தொடங்கிய 12-வது நிமிடத்தில் ரஷ்ய அணியின் கசின்ஸ்கீ கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 43-வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் போட்டியின் முதல்பாதியில் ரஷ்யா 2-0 என முன்னிலையில் இருந்தது.

போட்டியின் இரண்டாவது பாதியில் 71-வது நிமிடத்தில் ரஷ்யாவின் டிசியூபா கோல் அடித்தார். போட்டியின் இறுதி நேரத்தில் ரஷ்யாவின் டென்னிஸ் செரிஷேவ் தனது இரண்டாவது கோலை அடித்தார். அதன்பின் ரஷ்யாவின் கோலோவின் ஒரு கோல் அடித்தார். சவுதி அரேபியா அணியினர் இறுதிவரை முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளைப் பெற்றது.Trending Articles

Sponsored