ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோ - டிராவில் முடிந்தது போர்ச்சுக்கல் - ஸ்பெயின் ஆட்டம்! #FIFA2018Sponsoredரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடிக்க, பரபரப்பான போர்ச்சுக்கல் - ஸ்பெயின் டிராவில் முடிந்தது. 

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில், போர்ச்சுக்கல் - ஸ்பெயின் அணிகள் மோதின. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடர், ரஷ்யாவில் நேற்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி 3 புள்ளிகளைப் பெற்றது. இதையடுத்து, இன்று 3 போட்டிகள் நடைபெற்றன. இதில், முக்கிய மற்றும் கடைசி ஆட்டமாகப் புகழ்பெற்ற போர்ச்சுக்கல் - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் போர்ச்சுக்கல் கேப்டனும்,  நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்கினார்.

Sponsored


ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில், பெனால்டி வாய்ப்பு கிடைக்க அதைச் சரியாகப் பயன்படுத்தி ரொனால்டோ கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில், ஸ்பெயின் வீரர் தியாகோ கோஸ்டா கோல் அடிக்க 1 - 1 என ஆட்டம் சமமானது. பின்னர்    44-வது நிமிடத்தில், ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால், முதல் பாதியில் 2 - 1 என்ற கணக்கில் போர்ச்சுக்கல் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும், ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. 55-வது நிமிடத்தில் தியாகோ கோஸ்டா மீண்டும் கோல் அடிக்க, 58-வது நிமிடத்தில் நாச்சோ ஒரு கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 3- 2 முன்னிலைபெற்றது.

Sponsored


இதனால், ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. கடைசிக் கட்டத்தை எட்டியபோது ஆட்டம் முடிய 2 நிமிடமே இருந்த நிலையில்,     பிரீ- கிக் மூலம் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடிக்க, ஆட்டம் 3 - 3 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. முன்னதாக நடந்த முதல் ஆட்டத்தில்,  எகிப்தை வீழ்த்தி உருகுவேவும் , இரண்டாவது ஆட்டத்தில் மொராக்கோவை வீழ்த்தி இரானும் வெற்றிபெற்றன. Trending Articles

Sponsored