பால் டேம்பரிங் புகார் - களத்துக்கு வர மறுத்த இலங்கை வீரர்கள்.. சமாதானம் செய்த நடுவர்..!



வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தைச் சேதப்படுத்தியாக இலங்கை வீரர்கள் மீது புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து அம்பயர்களுக்கு எதிராக இலங்கை வீரர்கள் போர்க்கொடி தூக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Sponsored


தினேஷ் சண்டிமால் தலைமையிலான இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றுவருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் இரண்டாம் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. முன்னதாக இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, இலங்கை வீரர் தனஞ்ஜெய டிசில்வா பந்தைச் சேதப்படுத்தியாக அம்பயர் சந்தேகம் அடைந்தனர்.

Sponsored


இதுகுறித்து வீரர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது பந்தை மாற்ற அம்பயர்கள் முடிவு செய்தனர். அம்பயர்களின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு வராமல் இலங்கை வீரர்கள் ட்ரெஸ்ஸிங் ரூமிலேயே இருந்தனர். இதனையடுத்து போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் இலங்கை கேப்டன் மற்றும் பயிற்சியாளருடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பந்தை மாற்றுவதற்கு இலங்கை வீரர்கள் ஒத்துக்கொள்ளப் போட்டி மீண்டும் துவங்கியது. முன்னதாக இரண்டு மணி நேரம் போட்டி தடைப்பட்டது. இலங்கைக்கு அபராதமாக 5 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குக் கூடுதலாக வழங்கப்பட்டது.

Sponsored


பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐசிசி,  ``தவறு நிரூபிக்கப்பட்டால் இலங்கை வீரர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்'' என எச்சரித்துள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்தைச் சேதப்படுத்திய புகாரில் ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், ஸ்மித், பான் கிராப்ட் உள்ளிட்டோருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



Trending Articles

Sponsored