ஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்துக்குப் பின்தங்கிய ஆஸ்திரேலியா!சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி ஆறாவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. 

Sponsored


Photo Credit: Cricket.com.au

Sponsored


தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தைச் சேதப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பந்தைச் சேதப்படுத்தியதாக இளம் வீரர் பான் கிராஃப்ட் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர்களுக்கு 12 மாதங்கள் சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் வாரியம் மட்டுமில்லாது, ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. இந்த விவகாரத்துக்குப் பின்னர் வெற்றிப்பாதைக்குத் திரும்ப முடியாமல் டிம் பெய்ன் தலைமையிலான இளம் ஆஸ்திரேலிய அணி அவதிப்பட்டு வருகிறது. 

Sponsored


அந்த அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பின்தங்கியுள்ளது. சமீபத்திய ஐசிசியின் தரவரிசையில் அந்த அணி பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக 6வது இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானும், அந்த அணியும் 102 புள்ளிகள் பெற்றிருந்தாலும், தசம புள்ளிகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி முதலிடத்திலும், இந்திய அணி இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே 3 மற்றும் 4 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன.    Trending Articles

Sponsored