உலகக்கோப்பை கால்பந்து : எகிப்து அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது ரஷ்யா!Sponsored21-வது உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. குரூப் 'ஏ' பிரிவில், ரஷ்யா மற்றும் எகிப்து அணிகள் மோதிய ஆட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி, எகிப்தை எளிதாகத் தோற்கடித்தது.

5-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவை துவம்சம் செய்த ரஷ்ய அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் உத்வேகத்தில் இன்று களமிறங்கியது.

Sponsored


எகிப்து தனது முதல் போட்டியில் உருகுவே அணியிடம் தோல்வியுற்றிருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது சலா முதல் போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் களமிறங்கியதால், எகிப்து அணி கடுமையான சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Sponsored


ஆட்டம் தொடங்கியதிலிருந்து இரு அணிகளும் டிஃபன்ஸில் கூடுதல் கவனம் செலுத்தின. அவ்வப்போது கிடைத்த வாய்ப்புகளை இரு அணிகளும் கோல் ஆக்கத் தவறின. இதனால், முதல்பாதி கோல் எதுவுமின்றி முடிந்தது.

இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே, ரஷ்ய வீரர் அடித்தப் பந்தை அஹமத் ஃபாதி தடுக்க முயற்சி செய்தபோது, பந்து அவரின் காலில் பட்டு சேம் சைடு கோல் ஆனது. 1-0 என்ற முன்னிலை பெற்றதும் விறுவிறுப்பாக ஆடிய ரஷ்ய அணி அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டு எகிப்தை நிலைகுலையச் செய்தது. 59-வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் ரஷ்யாவுக்காக கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து 62-வது நிமிடத்தில் டிசியூபா அடுத்த கோலைப் பதிவுசெய்தார். 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி ஆட்டத்தில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 73-வது நிமிடத்தில் ரஷ்ய அணியின் டிஃபண்டர் செய்த தவறால், எகிப்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சலாவுக்கு பெனால்டி வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட சலா, உலகக்கோப்பையில் தனது முதலாவது கோலை பதிவுசெய்தார். எனினும், எகிப்து அணியால் அதன்பிறகு கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி வெற்றி பெற்று குரூப் 'ஏ' பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியுற்றதால், அடுத்தச் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது எகிப்து அணி.Trending Articles

Sponsored